ஐபிஎல் 2017; சுவாரஸ்ய துளிகள்
2017-04-05 12:02:20 | General

ரி20 கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக் போட்டித்தொடர் இன்று ஆரம்பமாகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஹைதராபாத்தில் இன்று நடைபெறவுள்ளன. 

# ஐபிஎல் ரி20 தொடரின் 10ஆவது சீசன் இன்று தொடக்கம் மே 21ஆம் திகதி வரை நடைபெறும். 
 
# 56 லீக் ஆட்டங்கள், பிளே ஆப் சுற்றில் 3 ஆட்டங்கள், இறுதிப் போட்டி என மொத்தம் 60 ஆட்டங்கள் நடைபெறுகிறது. 
 
# சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டேவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.
 
# இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. 
 
# தொடக்க விழாக்கள் 8 நகரங்களில் நடத்தப்படுகின்றன. 
 
# இன்று ஹைதராபாத்தில் தொடக்க விழா நடைபெற உள்ள நிலையில், புனே நகரில் 6 ஆம் திகதியும், ராஜ்கோட்டில் 7 ஆம் திகதியும், இந்தூரிலும், பெங்களூரிலும் 8 ஆம் திகதியிலும், மும்பையில் 9 ஆம் திகதியும், கொல்கத்தாவில் 13 ஆம் திகதியுமம், டெல்லியில் 15 ஆம் திகதியும் நடைபெறுகின்றன.

TOTAL VIEWS : 777
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
vrq6p
  PLEASE ENTER CAPTA VALUE.