இலங்கைக்கு இமாலய இலக்கு 
2017-12-05 15:56:53 | Leftinraj

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இலங்கை அணிக்கு இந்தியா 409 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. 

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் நாளில் இந்திய அணியின் பேட்டிங் அபாரமாக இருந்தது. மிகவும் அதிரடியாக ஆடிய கோஹ்லி இரட்டை சதம் அடித்தார். இவர் 243 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.ரோஹித் 65 ரன்கள் எடுத்தார்.

முதல் இன்னிங்சில் இந்தியா 536 ரன்கள் எடுத்தது. 7 விக்கெட்டுகள் இழந்து இந்தியா விளையாடிக் கொண்டு இருந்த போது இன்னிங்ஸ் டிக்ளேர் செய்யப்பட்டது. 

முதல் இன்னிங்சில் இலங்கை அணி மிகவும் நிதானமாக ஆடியது. இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 111 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் 164 ரன்கள் எடுத்தார்.இலங்கை அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 373 ரன்கள் எடுத்து இருக்கிறது. 

அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸ் களம் இறங்கிய இந்திய அணி அதிரடியாக ஆடியது. தவான் 67 ரன்களும்இ கோஹ்லிஇ ரோஹித் தலா 50 ரன்களும் எடுத்தனர். இந்த நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்து இருந்த போது டிக்ளேர் செய்தது. 

இலங்கை இந்தியாவை விட 409 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. தற்போது இலங்கை இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட களம் இறங்கி இருக்கிறது.

சுநயன அழசந யவ: hவவிள:ஃஃவயஅடை.ழநெiனெயை.உழஅஃநெறளஃளிழசவளஃஉசiஉமநவஃ4வா-னயல-கiயெட-வநளவ-அயவஉh-டிநவறநநn-iனெயை-எள-ளசi-டயமெய-303949.hவஅட

TOTAL VIEWS : 107
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
7hnxy
  PLEASE ENTER CAPTA VALUE.