20 செக்கனில் வெற்றி
2017-03-27 14:33:49 | General

குத்துச் சண்டை போட்டியொன்றில் பிரித்தானிய வீரர் லோரன்ஸ் ஒகோலீ என்பவர் 20 செக்கன்களில் வெற்றியீட்டியுள்ளார்.


ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பிரித்தானியாவை பிரதிநிதித்துவம் செய்த ஒகோலீ, முதலாம் தொழில்முறை போட்டியிலேயே இந்த வெற்றியை பதிவு செய்துள்ளார்.


24 வயதான குஸியர் வெயிற் குத்துச் சண்டை வீரர் ஒகோலீ, எதிர்த்து போட்டியிட்ட ஜெவ்றி கேவை நொக்கவுட் முறையில் 20 செக்கன்களில் வீழ்த்தி வெற்றியை பதிவு செய்துள்ளார்.


ரியோ ஒலிம்பிக் போட்டித் தொடரின் போது ஒகோலீ இறுதி 16 பேர் வரையில் முன்னேறிய போதிலும், கியூப வீரர் ஒருவரிடம் தோல்வியடைந்திருந்தார்.


நான்கு ஆண்டுகளில் உலக குத்துச் சண்டை சம்பியன் பட்டம் செல்வதே தமது இலக்கு என ஒகோலீ தெரிவித்துள்ளார்.

TOTAL VIEWS : 270
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
e3iwg
  PLEASE ENTER CAPTA VALUE.