மனிதன் நிலவில் கால் பதித்த நாள் இன்று
2017-07-21 13:14:51 | General

சென்ற நூற்றாண்டின் மிக முக்கியமான நாளாக 1969ம் ஆண்டின்  ஜூலை 21ம் தேதியை வரலாற்று அறிஞர்கள் கொண்டாடுகிறார்கள். ஆம், அன்றுதான் முதன்முதலாக மனிதன் நிலவில் கால்வைத்தான்.

நிலவைக் காட்டி சோறு ஊட்டிக்கொண்டிருந்த மனிதன், நிலவில் பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்ததாகச் சொன்ன மனிதன், நிலவை எண்ணி காதல் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த மனிதன் இந்த நாளில் அதே நிலவில் கால் வைத்த அதிசயம் நடைபெற்றது. அமெரிக்காவுக்கும், சோவியத் ரஷ்யாவுக்கும் பனிப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் விண்வெளி ஆய்விலும் கடுமையான போட்டியை இரு நாடுகளும் உருவாக்கி வந்தன.

முதல் விண்வெளி பயணத்தை ரஷ்யா நிறைவேற்றியதும், அமெரிக்கா வெகுண்டது. எப்படியேனும் ரஷ்யாவை மிஞ்ச வேண்டும் என்ற அடிப்படையில் நிலவுக்கு மனிதனை அனுப்பி வைக்கும் முயற்சியைக் கையில் எடுத்தது. தீவிரமான முயற்சியில் பல கட்ட சோதனைகளுக்குப் பின்னர், 1969ம் ஆண்டு, ஜூலை மாதம் 16  ம்  தேதி, அப்பல்லோ 11 என்ற விண்வௌி ஓடத்தை அமெரிக்கா ஏவியது.

நான்கு நாள்கள் பயணம் செய்த அந்த விண்வௌி ஓடம், அதே ஆண்டு ஜூலை 20ம் தேதி சந்திரனில் இறங்கியது. நிலவில் இறங்கும் இந்தத் திட்டத்தில் கட்டளை அதிகாரியாக நீல் ஆம்ஸ்ட்ராங்கும், கட்டளை விமானியாக மைக்கேல் காலின்சும், மற்றுமோர்  அதிகாரியாக எட்வின் ஆல்ட்ரினும் சென்றனர்.

மைக்கேல் காலின்ஸ் விண்வெளி ஓடத்திலேயே தாங்கிக்கொள்ள, ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும் 'ஈகிள்' எனும் சிறிய ரக ஓடத்தில் சந்திரனில் ஜூலை 20 அன்று இறங்கினர். பின்னர் 6 மணி நேர தாமதத்துக்குப் பிறகு ஜூலை 21ம் நாள் நிலவில் இறங்கி உலகையே வியக்க வைத்தனர்.

ஆல்ட்ரின் சற்றே தயங்க, முந்திக்கொண்ட ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். மனிதன் நிலவில் கால் வைத்த வரலாற்று மகத்துவம் நிறைந்த நாள் இன்று.

TOTAL VIEWS : 745
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
g4udz
  PLEASE ENTER CAPTA VALUE.