ஆப்பிளா? ஆண்ட்ராய்டா? பில்கேட்ஸின் பதில்
2017-10-04 11:43:20 | General

உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில்கேட்ஸ், நேர்காணல் ஒன்றில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை விமர்சித்துள்ளார்.

பில்கேட்ஸின் சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் இடையை கணினி துறையில் பல ஆண்டுகளாகப் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், பாக்ஸ் தொலைக்காட்சியில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற பில்கேட்ஸ், “ஆப்பிள் நிறுவனத்தில் தயாரிப்புகளில் ஆர்வமில்லாததால்தான், நான் ஆண்ட்ராய்டு போனையே பயன்படுத்துகிறேன்,” என்று கூறியுள்ளார்.

மேலும், மொபைலைப் பொறுத்த வரையில் ஐபோனுக்கு மாற்று ஆண்ட்ராய்டு மட்டுமே என்று கூறியுள்ளார். முன்னதாக, ஒரு பேட்டியில் பில்கேட்ஸின் மனைவி மெலிண்டா கேட்ஸ் தங்கள் வீட்டில் எவரும் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

TOTAL VIEWS : 854
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
0wgcr
  PLEASE ENTER CAPTA VALUE.