பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட தவறான வீடியோ; கோடிக்கணக்கான மக்கள் பார்த்த அவலம்
2016-10-28 17:55:31 | General

அமெரிக்காவிலிருந்து இயங்கும் வைரல் பேஸ்புக் பக்கம் ஒன்று கோடிக்கணக்கான மக்களை தவறான வீடியோ பார்க்க வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் அமெரிக்க வைரல் பேஸ்புக் பக்கம் ஒன்று, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரண்டு விண்வெளி வீரர்கள் இருப்பது போன்ற ஒரு நேரலை வீடியோவை வெளியிட்டது.

குறித்த வீடியோவை உலக முழுவதும் கோடிக்கணக்கான பேர் பார்த்துள்ளனர். லட்சக் கணக்கான பேர் லைக் செய்துள்ளனர். குறித்து வீடியோ சுமார் மூன்று மணிநேரம் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நாசா, குறித்த வீடியோ 2013ம் ஆண்டில் எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த திகதியில் நேரலையாக எந்த வீடியோவையும் சர்வதேச விண்வெளி நிலையம் வெளியிடவில்லை என நாசா உறுதியளித்துள்ளது.

இதுபோன்ற நிகழ்வு இருந்தால் முன்னரே அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

தற்போது, நாசா வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் குறித்த தவறான நேரலை வீடியோ பார்த்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்த நேரடி வீடியோவின் உண்மைத் தன்மையை அறியாமல் பல செய்தி நிறுவனங்களும் தமது இணையத்தளத்திலும் பேஸ்புக் பக்கங்களிலும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

TOTAL VIEWS : 4898
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
h4mtr
  PLEASE ENTER CAPTA VALUE.