நோக்கியா 6 விற்பனைக்கு முன்பே 'பல லட்சம்' பேர் முன்பதிவு 
2017-08-11 13:04:42 | General

சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியாவின் ரீஎன்ட்ரி ஸ்மார்ட்போன் சந்தையில் நோக்கியா பீச்சர் போன் மற்றும் மூன்று ஸ்மார்ட்போன்களால் துவங்கியுள்ளது. சர்வதேச சந்தையை தொடர்ந்து நோக்கியா 3310 (2017), நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு நோக்கியா 6 தவிர மற்ற சாதனங்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகின்றன.

அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் நோக்கியா 6 முன்பதிவுகள் ஜூலை 14ம் தேதி துவங்கியது. ஆகஸ்டு 23ம் தேதி விற்பனைக்கு வர இருக்கும் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை வாங்க சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் வாங்க முன்பதிவு செய்துள்ளனர் என அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது.

நோக்கியா 6 சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், மற்ற நிறங்கள் கொண்ட மாடல்களில் 3 ஜிபி ரேமும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், ஆர்ட் பிளாக் நிறம் கொண்ட மாடலில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அனைத்து நிறம் கொண்ட மாடல்களிலும் மெமரியை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்டோன் எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கூகுள் டிரைவ் வசதி கொண்டுள்ள நோக்கியா 5 ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

அமேசான் தளத்தில் நோக்கியா 6 வாங்கும் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பே கணக்கில் ரூ.1,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. வோடபோன் வாடிக்கையாளர்கள் 1 ஜிபி டேட்டா வங்கும் போது 9 ஜிபி கூடுதல் டேட்டா ஐந்து மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. மைக்மைட்ரிப் (Makemytrip.com) தளத்தில் தங்கும் விடுதி மற்றும் விமான பணச்சீட்டுகளில் ரூ.2,500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே போல் அமேசான் கின்டிள் புத்தகங்களில் அதிகபட்சம் 80 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

TOTAL VIEWS : 608
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
t9djk
  PLEASE ENTER CAPTA VALUE.