திருப்பூரில் பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை
2017-08-30 13:56:52 | General

பிறந்த குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிய, அந்தக் குழந்தையின் பிறப்பு உறுப்பை வைத்துச் சொல்லும் வழக்கம், இருந்துவருகிறது.

வளர்ச்சியடைந்த இன்றைய நவீன மருத்துவத்துறையில், நம் வாழ்வியல் மாற்றங்களால் அவ்வப்போது அதிசய சம்பவங்களும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

அந்த வகையில்தான், திருப்பூர்பல்லடம் சாலையில் அமைந்திருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில், பிறப்புறுப்பு ஏதுமின்றி குழந்தை பிறந்திருக்கும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

திருப்பூரை அடுத்துள்ள முருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அம்சக்கொடி என்பவர், தன் நிறைமாத கர்ப்பிணி மனைவி பரமேஸ்வரியை  பல்லடம் சாலையில் அமைந்திருக்கும் தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதித்துள்ளார்.

அங்கு அவருக்கு பிரசவ வலி ஏற்படவே, உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், பிறந்த குழந்தை பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்ததால், மருத்துவர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக மேல் சிகிச்சை அளிப்பதற்காக குழந்தையை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர்.

மேலும், அந்த பச்சிளம் குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து சோர்வடைந்துகொண்டே வந்ததால், அந்தக் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து, உடல்நிலையைச் சீராக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது மருத்துவக் குழு.

TOTAL VIEWS : 311
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
p0skd
  PLEASE ENTER CAPTA VALUE.