கடலுக்குள் இறக்கப்பட்ட பிரித்தானியாவின் பிரம்மாண்ட போர்க்கப்பல்
2017-06-28 10:26:29 | General

போர் விமானங்களைத் தாங்கும் பிரித்தானிய கடற்படையின் பிரம்மாண்ட போர்க்கப்பல் முதல் தடவையாக கடலில் இறக்கப்பட்டுள்ளது.

அறுபத்தையாயிரம் தொன் எடையைக் கொண்ட HMS Queen Elizabeth என்கிற இந்த போர்க்கப்பல், அது கட்டப்பட்ட ஸ்கொட்லாந்தின் ரோசித் துறைமுகத்தில் இருந்து சோதனை ஓட்டமாக ஆறு வாரங்கள் கடலில் பயணிக்கவுள்ளது.

பல ஆண்டுகளாக பிரித்தானியாவில் கட்டமைக்கப்பட்ட, தொழில் நுட்பரீதியில் மிகவும் சிக்கலான இந்த திட்டத்துக்கு 380 கோடி அமெரிக்க டொலர் செலவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

300 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பல், கட்டுமான தளத்திலிருந்து மிக கவனமாக 11 சரக்குப் படகுகளின் உதவியுடன் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

செல்லும் வழியில் இருக்கும் பல பாலங்களை கடப்பதற்காக இது தன் உயரமான கொடிமரத்தை கீழிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எல்லா பணிகளும் முழுமையாக நிறைவடைந்து கடலுக்குள் இறக்கப்பட்டுள்ள குறித்த கப்பலின் முழுமையான செயற்திறன் பரிசோதிக்கப்பட இருக்கின்றது.

திட்டமிட்டபடி எல்லா பரிசோதனைகளும் கட்டுமானங்களும் முடிக்கப்பட்டால் இந்த ஆண்டின் இறுதியில் அது தன் புதிய இருப்பிடமான போர்ட்ஸ்மவுத் துறைமுகத்தில் குடியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

TOTAL VIEWS : 974
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
rpt1y
  PLEASE ENTER CAPTA VALUE.