அமெரிக்காவில் கடற்படை விமானம் விபத்து; 16 பேர் பலி
2017-07-11 12:32:14 | General

அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பி மாநிலத்தில் கடற்படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 16 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

கேசி130 ரக கடற்படை விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானது. 

விமானம் விபத்துக்குள்ளான போது, ஏற்பட்ட சத்தத்தை கேட்டு அருகில் உள்ள மக்கள் அப் பகுதிக்கு வந்தனர். 

அங்கு விமானம் சுக்கு நூறாக சிதறி தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. பின்னர் விபத்து நடந்ததை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். 

கடற்படை காவல்துறையின் செய்தி தொடர்பாளர் கேப்டன் சாரஹ் பர்ன் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

TOTAL VIEWS : 487
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ia6zk
  PLEASE ENTER CAPTA VALUE.